நடிகை பிந்துகோஷுவை நெகிழவைத்த விஷால்!

மருத்துவ உதவி இல்லாமல் தவித்து வந்த நடிகை பிந்துகோஷுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷால், ரூ.5,000 நிதியுதவி வழங்கியதோடு, மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

விஷால்

மருத்துவ உதவி இல்லாமல் மூத்த நடிகை பிந்துகோஷ் மிகவும் சிரமப்படுவதாக ஆனந்த விகடனில் வந்த செய்தியை அறிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷால், தனது தேவி அறக்கட்டளை மூலம் உடனடி நிதி உதவியாக ரூ.5,000 வழங்கியும் அதைத் தொடந்து மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கவும் முன்வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி பிந்துகோஷ் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத காரணத்தால் அவரை சங்கத்தில் இணைத்து மேற்கொண்டு உதவிகள் வழங்கப்படும் எனக் கூறியுள்ள விஷால், அதற்கான உதவித்தொகையைப் பிந்துகோஷிடம் விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் வழங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!