திருக்குறளை ஒப்புவித்த டென்மார்க் மாணவர்கள்!- நெகிழ்ந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

டென்மார்க்கிலிருந்து தமிழகம் வந்துள்ள அந்நாட்டு மாணவர்கள், தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனைச் சந்தித்து திருக்குறள் ஒப்புவித்து அசத்தினர்.

தமிழகப் பள்ளிகள் மற்றும் கலாசாரத்தை அறிந்துகொள்வதற்காக டென்மார்க்கிலிருந்து பள்ளி மாணவர்கள் தமிழகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜனை தலைமைச் செயலகத்தில் சென்று நேரில் சந்தித்தனர். அவர்களுக்கு, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் புத்தகங்களைப் பரிசளித்தார். அப்போது, அமைச்சரிடம் வணக்கம் எனக் கூறி திருக்குறளை ஒப்பித்தனர். முதலில் 'கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' என்றக் குறளை முதலில் கூறினர். பின்னர், 'எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு' என்ற குறளையும் ஒப்புவித்தனர். மேலும், இந்தக் குறள் குறித்த விளக்கத்தையும் கூறினர். அதனைக் கண்டு, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அசந்துப்போனார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!