வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (06/02/2018)

கடைசி தொடர்பு:22:40 (06/02/2018)

`ரெசிப்ரோசிட்டி' எனும் இயற்கைத் திருவிழா!

யற்கையைக் காக்கவும் பூமியின் வெப்பநிலையை உயர்த்தாமல் இருக்கவும் பல்வேறு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இவற்றையொட்டி, ஏப்ரல் 22-ம் தேதி, உலகப் புவிதினத்தை முன்னிட்டு சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா பவுண்டேஷனில், ரெசிப்ரோசிட்டி பவுண்டேஷன் சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22 மற்றும் 23-ம் தேதிகளில், ரெசிப்ரோசிட்டி என்ற பெயரில் இயற்கை கூடல் நடத்தப்பட்டது. அந்த இரண்டு நாLkaளும் ஆறு முக்கியப் பகுதிகளாகth தொகுக்கப்பட்டிருந்தது. இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையும் வளமும்தான் நமது வாழ்க்கை என்பதைப் பறைசாற்றுவதுபோல கடந்த வருட நிகழ்ச்சி அமைந்திருந்தது. நாம் உபயோகப்படுத்தும் சாதாரண பைகளில் ஆரம்பித்து உணவுகள், உடைகள், உபயோகப்படுத்தும் வீட்டுப்பொருள்கள் என அனைத்து வகையான பொருள்களும் இருந்தன. இந்நிகழ்ச்சியைப் பொருத்தவரை இயற்கையைக் கண்முன்னர் கொண்டு வருவதுதான் அதன் நோக்கம். அதைக் கடந்தமுறை செம்மையாகவே செய்திருந்தது ரெசிப்ரோசிட்டி பவுண்டேஷன். கடந்தமுறை இந்நிகழ்வில் பல இயற்கை ஆர்வலர்கள் பங்கெடுத்து, பலவித உரையாடல்களையும் பயிற்சிகளையும் வழங்கினர். குழந்தைகளுக்கான பொம்மலாட்டப் பயிற்சியில் தொடங்கி, சிற்பங்கள் செய்வது, ஆரோக்கியமான உணவுகளைச் சமைப்பது போன்ற பல தளங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. 

ரெசிப்ரோசிட்டி

இந்த வருடமும் சென்னை, திருவான்மியூரில் இருக்கும், `கலாஷேத்ரா'வில் ரெசிப்ரோசிட்டி (Reciprocity ) என்ற பெயரில் பிப்ரவரி 10 மற்றும் 11-ம் தேதிகளில், பெரும் இயற்கைக் கூடல் நிகழ்வு அரங்கேற உள்ளது. இந்த இரண்டு நாள்களும் கொண்டு, இயற்கை குறித்த புரிதலை, இயற்கையுடனான ஓர் உரையாடலை, உறவாடலை நமக்கு வழங்க இருக்கின்றன. உணவுகளில் தொடங்கி உடைகள் வரை இயற்கைச் சார்ந்த பொருள்களின் விற்பனைக் கண்காட்சி நடைபெற உள்ளது. இரண்டு நாள்களிலும் இசைக் கச்சேரிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்வுகளில் பங்கெடுக்க எந்த ஒரு கட்டணமும் இல்லை. நம்மால் காயம்பட்டுப் போயிருக்கும் நாம் சார்ந்திருக்கும் இந்தப் பூமிக்கு, நம்மாலான முடிந்த வழிகளில் அதன் காயங்களை ஆற்ற ஏதும் செய்ய முடியுமா என்ற கேள்வியின் விடைக்கான சிறு தொடக்கமாக இந்த நிகழ்வு இருக்கலாம். இந்நிகழ்ச்சிக்குப் பசுமை விகடன் ஆதரவு வழங்கியிருக்கிறது. இந்நிகழ்ச்சியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள https://www.facebook.com/reciprocityfoundation என்ற முகநூலுக்குச் செல்லவும்.