வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (07/02/2018)

கடைசி தொடர்பு:08:32 (07/02/2018)

ஆந்திராவுக்கு அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும்! - அருண் ஜெட்லி

அருண் ஜேட்லிஆந்திரப்பிரதேச மாநில மறுநிர்மாணச் சட்டத்தின் கீழ், மத்திய அரசு அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல்செய்து பேசிய அருண் ஜெட்லி, ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு அம்மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறையை ஈடுசெய்ய மத்திய அரசு ஏற்கெனவே 3,900 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
 
சிறப்புத் திட்டத்தின் கீழ் ஆந்திராவுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்துவருவதாகக் குறிப்பிட்ட அவர், புதுடெல்லியில் மத்திய அரசின் செலவினச் செயலாளருடன் ஆந்திர நிதித்துறைச் செயலாளர் விரைவில் இதுகுறித்து ஆலோசனை நடத்துவார் என்றார்.

ஆந்திர மாநிலத்துக்கு வெளியே இருந்து வரும் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவது பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என்றும் அருண் ஜெட்லி கூறினார்.

தெலுங்குதேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவையில் தங்கள் மாநிலத்திற்கு நிதி தேவை என்று வலியுறுத்தியதைத் தொடர்ந்து, நிதியமைச்சர் இந்த உறுதிமொழியை அளித்தார். 

மத்திய அரசு சமீபத்தில் தாக்கல்செய்த, வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்று அம்மாநில முதல்வரும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், மத்திய அரசை நிதி வழங்கக்கோரி வலியுறுத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது நினைவிருக்கலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க