மர விற்பனையில் முறைகேடு!- குமரி ஆட்சியர், ரப்பர் கழக இயக்குநருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

rubber

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த  அந்தோணிமுத்து என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'குமரி மாவட்டத்தின் வடமேற்குப் பகுதி, ரப்பர் மரங்கள் மிகுந்தது. இந்த மரங்களிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டே  இப்பகுதி மக்கள் வாழ்க்கையை நடத்திவருகின்றனர். ஓகி புயலில் பெரும்பாலான ரப்பர் மரங்கள் சேதமடைந்தன. அவற்றை அப்புறப்படுத்த கீரிப்பாறை, மணலோடை, சிற்றார், மையிலார், கோதையார் ஆகிய ரப்பர் கோட்ட மேலாளர்கள்மூலம் டெண்டர் மற்றும் ஏல விற்பனை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அது, ஆன்லைனில் அறிவிக்கப்படவில்லை. அதுபோல சுமார் 30 சதவிகித மரங்கள் டெண்டர் அறிவிப்பில் சேர்க்கப்படவில்லை. இதில் முறைகேடு நடந்துள்ளது. ஆகவே, ஓகி புயலில் கீழே விழுந்த ரப்பர் மரங்கள் தொடர்பான டெண்டர் மற்றும் ஏல விற்பனையில் நடைபெற்ற முறைகேடுகள்குறித்து விசாரணை நடத்தவும், ஏல விற்பனைக்குத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து குமரி மாவட்ட ஆட்சியர், அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!