`பாரதியார் பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் மீண்டும் விசாரணை!’

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், லஞ்ச ஒழிப்புப் போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தினர். 

பாரதியார் பல்கலை

உதவிப் பேராசிரியர் பணிக்கு லஞ்சம் வாங்கிய புகாரில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த கணபதி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். குறிப்பாக, இதுசம்பந்தமாக, பல்கலைக்கழகப் பதிவாளர் வனிதாவிடம் உயர் கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது. மேலும், நாளை சிண்டிகேட் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புப் போலீஸார், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று மீண்டும் விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி ராஜேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் போலீஸார் 40 நிமிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பறிமுதல்செய்யப்பட்ட ஆவணங்கள்குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த 2016-ம் ஆண்டு, பேராசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்தும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணை நடத்தினர். லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் ரெய்டால், பல்கலைக்கழக வளாகம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!