`அவரால்தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன்' - சேலத்தில் நெகிழ்ந்த ராகவா லாரன்ஸ்

`ரஜினிகாந்த்துக்கு காவலனாக இருப்பதால் நான் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறேன்' என்று கூறுகிறார்கள் என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறினார்.

சேலத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது அம்மாப்பேட்டையைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்ற வாலிபர் மின்சாரம் தாக்கி இறந்தார். யோகேஸ்வரன் இறந்து ஒரு வருடம் நினைவு நாளில் அவரின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டிக் கொடுத்து இந்த வருடம் அதே பிப்ரவரி 7-ம் தேதி கிரகப்பிரவேச விழாவை நடிகர் ராகவா லாரன்ஸ் முன்னின்று நடத்தியிருக்கிறார்.

அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகவா லாரன்ஸ், ''ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் உயிரிழந்த யோகேஸ்வரன் குடும்பத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை. நான் அரசியலுக்கு வர மாட்டேன். அரசியலிலிருந்து செய்ய வேண்டியதை நான் இப்போதே செய்து வருகிறேன். ரஜினிகாந்த்துக்கு காவலனாக இருப்பதால் நான் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறேன் என்று கூறுகிறார்கள். அப்படி அல்ல. எம்.எல்.ஏ, அமைச்சர் பதவிக்கெல்லாம் ஆசைப்படவில்லை. என் தாய்க்கு மகனாக இருக்கவே ஆசைப்படுகிறேன். என் தாய் சொன்னால் அரசியலுக்கு வருவேன். என் தாய், அரசியல் ஒரு தப்பான இடம் என அச்சப்படுகின்றார். ரஜினிகாந்த்துக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். எதற்கு என்றால் அவரால்தான் நான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். ரஜினி எது செய்தாலும் அவருக்கு நான் உதவிகரமாக இருப்பேன். ரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்து நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். சுயநலம் இல்லாத நல்ல உள்நோக்கம் கொண்டவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்'' என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!