மாலத்தீவை தமிழீழ இயக்கம் கைப்பற்றியபோது நடந்தது என்ன?

ந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் நெருங்கிய உறவு உண்டு. இந்தியப் பெருங்கடலில் 1,200 குட்டி குட்டித் தீவுகளைக் கொண்ட அழகு நிறைந்த நாடு இது. சுமார் நாலரை லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நாட்டில் 25,000 இந்தியர்கள் வசிக்கின்றனர். இந்தியர்களின் விருப்பத்துக்குரிய சுற்றுலாத்தளமும் மாலத்தீவு. சார்க் நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. எந்த நிலையிலும் இந்தியாவுக்கு ஆதரவு தரும் நாடு. உரி தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் நடந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தபோது, மாலத்தீவும் அந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. 

மாலியை ப்ளாட் இயக்கத்தினர் கைப்பற்றிய சம்பவம்

தற்போது, அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைப் போலவே 1988-ம் ஆண்டும் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. நவம்பர் 3-ந் தேதி இலங்கை விடுதலைப் போராளிக் குழுக்களில் ஒன்றான ப்ளாட் அமைப்பைச் சேர்ந்த 60 பேர் திடீரென்று மாலத்தீவு தலைநகர் மாலியை முற்றுகையிட்டு கைப்பற்றிக்கொண்டனர். ரேடியோ நிலையத்தையும் கைப்பற்றி தலைநகர் தங்கள் கட்டுப்பாட்டில் வந்ததாக அறிவித்தனர். சுற்றுலாப் பயணிகள்போல் மாலத்தீவுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்தவர்களும் மின்னல் வேகப் படகில் வந்தவர்களும் சேர்ந்து மாலியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். அப்போதைய அதிபர் அப்துல் கயாம் இந்தியாவிடம் உதவி கோரினார். 

இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி உடனடியாக இந்திய கடற்படை, விமானப்படையை மாலத்தீவு நோக்கி விரைந்து செல்ல உத்தரவிட்டார். மாலத்தீவை மீட்கும் பணிக்கு 'ஆபரேஷன் காக்டஸ்' என்று பெயரிடப்பட்டது. அதே நாளில் மாலத்தீவில் களமிறங்கிய இந்திய ராணுவத்தினர் சுமார் 6 மணி நேரத்தில் மாலியை ப்ளாட் இயக்கத்தவர்களிடமிருந்து மீட்டனர்.

உலக அரங்கில் இந்திய ராணுவத்துக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்த சம்பவம் இது. இந்தியாவுடன் நெருக்கம் காட்டும் மாலத்தீவை தங்கள் பக்கம் இழுக்க வேண்டுமென்ற நோக்கில் சீனா செயல்பட்டு வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!