வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (07/02/2018)

கடைசி தொடர்பு:20:20 (07/02/2018)

மோடி எழுதிய புத்தகத்தைத் தமிழக அமைச்சருக்குப் பரிசளித்த தமிழிசை சௌந்தர்ராஜன்..!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்து பிரதமர் மோடி எழுதிய 'தேர்வு வீரர்கள்'(Exam Warriors) என்றப் புத்தகத்தை தமிழிசை சௌந்தர்ராஜன் வழங்கினார். 

பிரதமர் மோடி எழுதிய 'தேர்வு வீரர்கள்'(Exam Warriors) என்ற புத்தகம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்தில் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் விதமாகப் பல்வேறு விதமான கருத்துகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை தலைமைச் செயலகத்தில் சென்று சந்தித்தார். அவரிடம், மோடி எழுதிய தேர்வு வீரர்கள் என்ற புத்தகத்தைப் பரிசாக அளித்தார். மேலும், இந்தப் புத்தகத்தை தமிழக மாணவர்கள் அனைவரிடத்தும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்' என்று கோரிக்கைவைத்தார்.