பக்கோடா கடை வைக்க பிரதமர் உதவி தேவையில்லை.- திருநாவுக்கரசர்

குடிநீரை உறிஞ்சி எடுத்து சூரிய ஒளி மின்சாரத் தகடுகளைச் சுத்தம் செய்யும் தனியார்மீது அரசு நடவடிக்கை தேவை என கமுதியில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

கமுதியில் திருநாவுக்கரசர் பேட்டி

கமுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்த தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ''கமுதி அருகே செங்கப்படையில் செயல்பட்டு வரும் அதானி சூரிய ஒளி மின் தயாரிப்பு நிறுவனம் தினசரி சோலார் தகடுகளைச் சுத்தம் செய்வதற்காகக் குடிநீரைப் பயன்படுத்தி வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு நிலவும் இப்பகுதியில் இது குடிநீரை உறிஞ்சி எடுத்து பயன்படுத்துவது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். 

பக்கோடா, டீ கடை வைப்பது தவறு இல்லை. இன்ஜினீயரிங் படித்து விட்டு அந்த வேலை பார்ப்பது என்பதும் அதற்கு பிரதமர் உதவி என்பதும் தேவையில்லை. பஸ் கட்டண உயர்வுக்கு மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். நெல்லை மாவட்டத்தில் கறுப்புக்கொடி காட்டிய காங்கிரஸ் கட்சியினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!