`சிண்டிகேட் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் துணைவேந்தர் பொறுப்புக் குழுவில் இடம்பெறக் கூடாது'- உயர்கல்வித்துறை செயலரிடம் மனு

பாரதியார் பல்கலைக்கழகம்

பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பிலிருந்து, கணபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், துணைவேந்தர் பொறுப்புக் குழுவினரைத் தேர்ந்தெடுப்பதற்காக, பாரதியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் இன்று நடக்கிறது. புள்ளியியல் துறைத்தலைவர் கே.கே.சுரேஷ் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், உயர்கல்வித்துறைச் செயலாளர் சுனில்பாலிவால் மற்றும் பல்கலைக்கழகப் பதிவாளர் வனிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இதில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக் குழுவில் இடம்பெறுபவர்கள் யார், யார் என்று முடிவு செய்யப்படுவார்கள்.

இந்நிலையில், பேராசிரியர் பணி நியமனம் தொடர்பாக, கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் துணைவேந்தர் பொறுப்புக் குழுவில் இடம்பெறக் கூடாது என்று, பல்கலைக்கழக எஸ்.சி, எஸ்.டி ஆசிரியர் மற்றும் அலுவலர் நலச் சங்கம் சார்பில் சுனில்பாலிவாலிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. "தவறுக்கு உடந்தையாக இருந்தார்களோ அவர்களையே பொறுப்புக் குழுவில் இடம்பெறவைத்தால், அது தவற்றை மறைப்பதற்கே வழிவகுக்கும்" என்று பல்கலைக்கழக எஸ்.சி, எஸ்.டி ஆசிரியர் மற்றும் அலுவலர் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதற்கு, "நல்ல நபர்களை மட்டுமே, துணைவேந்தர் பொறுப்புக் குழுவில் போடுவோம்" எனச் சுனில்பாலிவால் உறுதியளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!