வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (08/02/2018)

கடைசி தொடர்பு:16:55 (08/02/2018)

``நடிகர் சங்கத்துக்குள் விஷால் இனி நுழையவே முடியாது" - சவால்விட்ட ரித்தீஷ்

ரித்தீஷ்

வாராகி தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் உருவான 'சிவா மனசில புஷ்பா' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஜே.கே.ரித்தீஷ் பேசியபோது, "நான் இதுவரைக்கும் விஷால் என் நண்பன்னுதான் சொல்லிருக்கேன். அவர்மேல தப்புனு வாராகி சொன்னபோதுகூட ஆதாரமில்லாமல் ஊழல்னு சொல்லக் கூடாது. நிர்வாகத்துல தவறு நடந்திருக்குனுதான் சொல்லணும்னு சொல்வேன். ஒருநாள் நான் நிரூபிப்பேன்னு வாராகி சொன்னார். விஷாலைத் தேர்தல்ல ஜெயிக்க வைக்க நான் வீடுவீடா ஓட்டுக்கேட்டேன். நலிவடைந்த நடிகர்களுக்கு ஆதரவா விஷால் இருப்பார், நீங்க எல்லாம் காப்பாத்தப்படுவீங்கனு அந்த நடிகர்கள்கிட்ட சொல்லிச் சொல்லி ஓட்டுக்கேட்டேன். ராதாரவி அண்ணன் உதவி செய்ய முடியலைன்னாகூட கெடுதல் செய்ய மாட்டார்.

விஷால், கார்த்தி, நாசர் எல்லாரும் நடிகர் சங்கத்துக்கு எதிரா நிறைய போராட்டங்கள் நடத்திருக்காங்க. ஆனா, அவங்களை சங்கத்தை விட்டு நீக்கலை. அவர் நினைச்சிருந்தால் நீக்கியிருக்கலாம். விஷால் வந்ததிலிருந்து என் உட்பட 360 பேரை நீக்கியிருக்கார். விஷாலைக் கொண்டு வந்ததுக்கு எனக்கு கொடுத்த பரிசு இது. சரத்குமார், ராதாரவியை நீக்கும்போதே 'யாரையும் சங்கத்துல இருந்து நீக்காதீங்க. நாளைக்கு உங்களை இன்னொரு ஆள் நீக்கிட்டா சங்கத்துக்குள் ஆள் இருக்காது'னு சொன்னேன். அதனால்தான் விஷால் என்னை நீக்கிட்டார்போல. மலேசியாவுக்குப் போனபோது, விஷால்கூட ரமணாவும் நந்தாவும்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணாங்க. போன, நிகழ்ச்சியும் அவங்கதான் சன் டிவி-க்கு வித்தாங்க. இப்போ, மலேசியவில என் நண்பர்கள்கிட்ட பேரம் பேசியிருக்காங்க. அவங்களுக்கு நான்தான் மலேசியா நண்பரை அறிமுகம் செஞ்சுவெச்சேன். 'விஷாலுக்கு எத்தனை கோடி கொடுப்பீங்க. அதுபடி நான் இந்த நிகழ்ச்சியை பிக்ஸ் பண்ணித்தரேன்னு சொல்லியிருக்காங்க'. இதை அந்த நண்பர் எங்கிட்ட சொல்லும்போது, எனக்கே தெரியாம ஆள் வெச்சு வீடியோ எடுத்துட்டார் வாராகி. 

சிவா மனசில புஷ்பா இசை வெளியீட்டு விழா

நடிகர் சங்கத்துல இந்த முறை விஷால் நிக்கட்டும். நான் இந்த வாரம் உறுப்பினராயிடுவேன். கோர்ட் இருக்கு. நடிகர் சங்கத்துல எப்படி பதவிக்கு வர்றார்னு பாப்போம். விஷாலை எதிர்த்து நிக்கிறவங்கக் கூட நான் நிப்பேன். விஷால் என்ன சொன்னாலும் அதை ஏத்துக்க யாருமில்லை. செங்கலை வெச்சு கட்டடம் கட்டினா மட்டும் புண்ணியம் வராது. சங்கத்துல இருக்க மெம்பரை மதிக்கத் தெரியாதவர். இந்தச் சங்கம் எங்களுடையது. ஆகஸ்ட்ல இருந்து நாங்கதான் உட்காரப்போறோம். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குள் விஷால் இனி நுழையவே முடியாது. இது நான் பண்ணுற ஓபன் சேலஞ்ச்' என்றபடி முடித்தார். விழாவின் இறுதியில் 100 நலிவடைந்த கலைஞர்களுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க