Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`சிஸ்டம் தமிழகத்தில் சரியில்லையா இந்தியாவில் சரியில்லையா?' - ரஜினி பதில்

கமலுடன் கூட்டணி குறித்து காலம்தான் முடிவு செய்யும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

rajinikanth
 

சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ``கமலுடன் கூட்டணி சேருவது குறித்து காலம்தான் முடிவு செய்யும்’' என்றார்.

சிஸ்டம் தமிழகத்தில் சரியில்லையா இந்தியாவில் சரியில்லையா என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த், `தமிழ் நாட்டில்தான் சிஸ்டம் சரியில்லை’ என்றார். மத்தியில் சிஸ்டம் சரியா இருக்கிறதா என்ற கேள்விக்கு அவர், `முதலில்  தமிழகத்தில்தான் சிஸ்டம்  சரி செய்ய வேண்டும்’ என்றார். உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

2.0 மற்றும் காலா படங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ரஜினி, ``2.0 படத்துக்கான கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது. அதனால் முதலில் வெளிவருவது காலாவா அல்லது 2.0-ஆ என்பது இன்னும் 2 நாளில் தெரியும்’' என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement