`இனி சரிப்பட்டு வராது' - செல்லூர் ராஜுவால் கட்சித்தாவிய அரசு வழக்கறிஞர்

அமைச்சர் செல்லூர்ராஜுவின் தலையீடு பிடிக்காமல் அரசு வழக்கறிஞரும் அ.தி.மு.க இளம்பெண்கள் பாசறையின் மாவட்ட நிர்வாகியுமான கிறிஸ்டி தெபோராள் அ.தி.மு.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்லூர்ராஜு

இதுபற்றி வழக்கறிஞர் கிறிஸ்டி தெபோராள் கூறுகையில்,  ''மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மதுரை மாநகர் மாவட்ட இணைச்செயலாளராகப் பணியாற்றி வந்தேன். கட்சிப் பொறுப்பு ஒருபக்கம் இருந்தாலும், வழக்கறிஞர் பணியில் கட்சி சார்பில் செயல்படுவதில்லை. காரணம் அரசு வழக்கறிஞர் பணி என்பது சாதி மதம் கட்சி சார்பு பார்க்காமல் ஏழை, எளிய மக்களுக்காகப் பணியாற்றுவதாகும். அப்படியுள்ள நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு, நான் ஆஜராகிற வழக்குகளில் தலையிடத் தொடங்கினார்.

நீதிமன்றத்தை நாடி வரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்குச் சாதகமாகச் செயல்படச் சொன்னார். இதை நான் கண்டுகொள்ளாதபோது, சொல் பேச்சையே கேட்க மாட்டேங்கிறே என்று மரியாதை இல்லாமல் பேசத் தொடங்கினார்.  அரசு வழக்கறிஞர் பதவியிலிருந்து தூக்கி விடுவதாக மிரட்டினார். அதோடுதான் இனி இது சரிப்பட்டு வராது என்று அரசு வழக்கறிஞர் பொறுப்பு, கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்துவிட்டு பி.டி.ஆர்.தியாகராஜன் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்துவிட்டேன்'' என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!