வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (08/02/2018)

கடைசி தொடர்பு:20:40 (08/02/2018)

மீனாட்சியம்மன் கோயில் விபத்து. பதில் கேட்டு 65 கேள்விகளுடன் எம்.எல்.ஏ. மனு.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்தை தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் பல கருத்துகளைக் கூறி வரும் நிலையில், அக்கோயில் அமைந்திருக்கும் மத்திய தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனியாக ஒரு விசாரணை ஆய்வறிக்கை தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

மீனாட்சியம்மன்


இந்தநிலையில், விபத்து தொடர்பாக 65 கேள்விகள் அடங்கிய மனுவை அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவரிடம் பேசினோம். அவர் கூறுகையில், ``மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து தொடர்பாக நேரில்சென்று நான் பார்வையிட்ட போது, அதுகுறித்த விரிவான ஆய்வறிக்கையை வெளியிடுவேன் எனத் தெரிவித்திருந்தேன். அதன் முதல் முயற்சியாகப் பல்வேறு கோணங்களில் இந்த விபத்தை ஆராய்ந்து, அதனைக் கேள்விகளாகத் தொகுத்து மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், கோவில் இணை ஆணையர் ஆகியோரிடம் அளித்துள்ளேன். இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள் என நம்புகிறேன். ஒருவேளை எனக்கு பதில் தராவிட்டாலும் அவர்களால் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்தால்தான், என்னுடைய ஆய்வு உண்மை நிலையை எடுத்துரைக்கும்'' என்றார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க