வியாபம் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை

வியாபம் வழக்கு - ம.பி.முன்னாள் அமைச்சர் சர்மா

மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வியாபம் முறைகேடு தொடர்பாக, முன்னாள் கல்வித்துறை அமைச்சர் லக்ஷ்மிகாந்த் சர்மா உள்ளிட்டோருக்கு எதிராக மத்தியப் புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரசுப் பணியாளர்களை நியமிக்கும் வியாபம் அமைப்பு, பணி நியமனம் மற்றும் தேர்வு நடத்தியதில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து, சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது.

இந்த வழக்கில், கடந்த 2012-ம் ஆண்டு, இரண்டாம் கிரேடு ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர் நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, அம்மாநில முன்னாள் அமைச்சர் லக்ஷ்மிகாந்த் சர்மா, அவரது அலுவலக சிறப்பு அதிகாரி உள்பட 85 பேருக்கு எதிராக சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது.

அதில், அமைச்சர் லக்ஷ்மிகாந்த் சர்மா, தனது அலுவலக சிறப்பு அதிகாரி பங்கஜ் திரிவேதியைத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமித்தது, பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமான முறையில் ஆசிரியர்களாக நியமிக்கப் பரிந்துரைசெய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!