கட்டணம் ரூ.1,400 - நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

மருத்துவச் சேர்க்கைக்கான நீட் (NEET) தேர்வுக்கு, இன்று முதல் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். மார்ச் மாதம் 9-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். இதற்கான அறிவிப்பை மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. 

neet

கடந்த ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்பு படிக்க, நீட் தேர்வில் தேர்ச்சிபெறுவது அவசியம் என்பதை கட்டாயமாக்கியிருக்கிறது மத்திய அரசு. இந்த ஆண்டு நீட் தேர்வு, மே 6-ம் தேதி நடக்கும் என்று முன்னரே அறிவித்திருந்தது மத்திய இடைநிலை கல்வி வாரியம். நேற்று இரவு, விண்ணப்பம் செய்வதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 

நீட் தேர்வுக்கு www.cbseneet.nic.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு, விண்ணப்பக் கட்டணம் ரூ.1400. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிப் பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு ரூ.750. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வழியாகவே செலுத்தலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம்.  முதல் முறையாக பள்ளி செல்லாமல் பிளஸ் டூ முடித்தவர்கள் நீட் தேர்வு எழுத வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!