ரயில்வே தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் புதியவன் படுகொலை: வீட்டில் புகுந்து நண்பன் வெறிச்செயல் | AIOBC's Southern Railway General Secretary JK Puthiyavan killed

வெளியிடப்பட்ட நேரம்: 10:43 (09/02/2018)

கடைசி தொடர்பு:10:49 (09/02/2018)

ரயில்வே தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் புதியவன் படுகொலை: வீட்டில் புகுந்து நண்பன் வெறிச்செயல்

சென்னை ஐசிஎப் அருகே, ரயில்வே தொழிற்சங்கச் செயலாளர் புதியவன் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். AIOBC-யின் தென்னக ரயில்வே பொதுச் செயலாளராக இருந்தவர், ஜே.கே.புதியவன். இவர், வில்லிவாக்கம் ஐசிஎப் பகுதியில் வசித்துவந்தார். இந்த நிலையில், இன்று காலை அவரது வீட்டுக்குள் புகுந்த அவரது நண்பரே புதியவனை வெட்டிக் கொலைசெய்துள்ளார். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், புதியவனின் நண்பர் பாஸ்கர் வெட்டிக்கொன்றது தெரியவந்துள்ளது. தொடர்ந்து கொலைகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க