வெளியிடப்பட்ட நேரம்: 11:17 (09/02/2018)

கடைசி தொடர்பு:11:17 (09/02/2018)

அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்! அப்புறப்படுத்தப்படுகிறது மீனாட்சியம்மன் கோயில் கடைகள்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் அமைந்துள்ள கடைகள் அப்புறப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.

கடந்த 2-ம் தேதி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில், தொன்மையான வீர வசந்தராயர் மண்டபம் இடிந்துவிழுந்தது. 7,000 சதுர அடி பரப்பளவுக்கு சேதமடைந்துள்ளது. இது, தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விபத்துக்கு அடிப்படைக் காரணமாகக் கூறப்படும் , கோயிலுக்குள்ளே அமைந்திருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளைக் காலிசெய்ய வேண்டுமென்று அனைவரும் கூறிவரும் நிலையில்,  தங்களுக்கு மாற்று இடம் தருவதாக உறுதி அளித்தால்தான் காலிசெய்வோம் என்று பேச்சுவார்த்தையில் கடைக்காரர்கள் கூறிவந்த நிலையில், இன்று மதியத்துக்குள் கடைகளை அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மீனாட்சியம்மன்

இந்த நிலையில், மாவட்ட நிர்வாகமும் அறநிலையத்துறையும், இன்று கடைகளை அப்புறப்படுத்தும் பணியைத் தொடங்கின. காலை ஐந்து மணிக்கு கடைக்காரர்கள் கோயிலுக்கு வந்துவிட்டனர். அதிகாரிகள் தாமதமாக வந்ததால், கடைக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  ஒவ்வொரு கடைக்கும் இரண்டு பேர் மட்டும் உள்ளே சென்று பொருள்களை எடுக்க வேண்டுமென்று கூறியதால், அது எப்படி முடியும் என்று கடைக்காரர்கள் வாதம்செய்தார்கள். பிறகு சமாதானப்படுத்தப்பட்டு, தற்போது வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் மீனாட்சியம்மன் கோயிலைப் பார்வையிட வந்துள்ளனர். அனைத்து அதிகாரிகளும் கோயிலில் குழுமியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க