`நமக்குள் ஒற்றுமையில்லை' - மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொங்கிய பிரமுகர் 

அ.தி.மு.க.

'எம்.ஜி.ஆர் மன்றம்தான் அ.தி.மு.க-வின் தாய். எனவே, மன்ற நிர்வாகிகளின் பேச்சைக் கேளுங்கள்' என்று எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் தமிழ்மகன்உசேன் பேசியுள்ளார்.  சிறுபான்மை பிரிவு கூட்டத்தில் 'நமக்குள் ஒற்றுமையில்லை' என்று தமிழ்மகன் உசேன் பேசிய பெரும் சலசலப்பபை ஏற்படுத்தியுள்ளது. 

எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில், ஜெயலலிதா பிறந்தநாள் ஆலோசனைக் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் தமிழ்மகன்உசேன் பேசுகையில், 'எம்.ஜி.ஆர் மன்றம்தான் அ.தி.மு.க-வின் தாய். எம்.ஜி.ஆர் மன்றத்தில் நான் உள்பட நிர்வாகிகள் செயல்பட்டபோது, அரசியலுக்கு வருவோம் என்பது எங்களுக்குத் தெரியாது. எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனைகளைக் கேட்டு கட்சியை வழிநடத்தினார், எம்.ஜி.ஆர்.

அ.தி.மு.க.

அதுபோல, இப்போதைய நிர்வாகிகளும் எங்களுடைய ஆலோசனைகளைக் கேட்க வேண்டும். அம்மா பிறந்தநாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜெயலலிதா சிலை நிறுவ வேண்டும்' என்றார். தமிழ்மகன்உசேனின் பேச்சை ஆமோதிக்கும் வகையில்கட்சியின் மூத்த நிர்வாகிகள்  பேசினார். இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, பொன்னையன் மற்றும் நிர்வாகிகள் எம்.எல்.ஏ அலெக்ஸாண்டர், சுதா பரமசிவம், நீலாங்கரை முனுசாமி, ஜெ.எம்.பஷீர், பிஷப் நோபுள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

 கடந்த சில தினங்களுக்கு முன்பு, சிறுபான்மைப் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. அதில், சொற்ப எண்ணிக்கையிலேயே நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அந்தக் கூட்டத்தில் தமிழ்மகன்உசேன், 'நமக்குள் ஒற்றுமையில்லை. பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்' என்று காரசாரமாகப்  பேசியிருக்கிறார். தமிழ்மகன்உசேனின் இந்தப் பேச்சு, அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!