``ஜீயரிடம் வலியுறுத்தினேன்; எந்தப் பதிலும் சொல்லவில்லை'' - ஹெச்.ராஜா

வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முதல் தொடங்கியுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயரை பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா இன்று காலை சந்தித்தார். அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தவர்,  ''கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை மேற்கோள் காட்டியது 100 சதவிகிதம் ஆதாரமற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

அப்படி ஒரு கருத்தே இல்லை என்பதுதான் உண்மை. இந்த நிலையில் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜீயர் உண்ணாவிரதம் இருக்கிறார். உடலை வருத்திக்கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என ஜீயரிடம் வலியுறுத்தியுள்ளேன். அவர் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தின் பின்னணியில் சதி உள்ளது. அதன் தடயம் அளிக்கப்படுள்ளது'' என்றவரிடம், ''தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் எழுந்திருக்கவில்லை'' என்ற சர்ச்சை பற்றி கேட்டதற்கு, ''செம்மொழி மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு கலைஞர் எழுந்து நின்றாரா'' என்று பதிலளித்துவிட்டுக் கிளம்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!