வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (09/02/2018)

கடைசி தொடர்பு:15:01 (09/02/2018)

ஆன்லைனில் பத்திரங்களை எப்படிப் பதிவுசெய்வது?- 200 சார்பதிவாளர்களுக்குப் பயிற்சி

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பணியாற்றும் பத்திரப்பதிவு அலுவலர்கள், பத்திர எழுத்தர்கள் உள்ளிட்டோருக்கான பயிற்சி முகாம், நெல்லையில் நடைபெறுகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில் 200-க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.

பத்திரப்பதிவு பயிற்சி முகாம்

பத்திரப்பதிவுத் துறையில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், ஆன்லைன் மூலமாக பத்திரங்களைப் பதிவுசெய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக, 41 சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் தென்காசி. கடையம், சேரன்மகாதேவி சார்பதிவாளர் அலுவலகங்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் கீழூர், குமரி மாவட்டத்தில் இடலாக்குடி, மார்த்தாண்டம் ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களும் ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன்மூலம் பத்திரங்களைப் பதிவுசெய்யும் நடைமுறைகுறித்தும் இதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சாஃப்ட்வேரைப் பயன்படுத்துவது தொடர்பாக எழும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையிலும், பத்திரப்பதிவு அலுவலர்கள், பதிவு எழுத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது. நெல்லை மண்டலத்தில், மொத்தம் 85 சார்பதிவாளர் அலுவலங்கள் உள்ளன. இதில், தற்போது ஆன்லைன்மூலம் பத்திரப்பதிவுசெயல்படுத்தப்படும் அலுவலகங்கள் தவிர, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஆன்லைன் பத்திரப்பதிவு விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

இதற்காக, மூன்று நாள் பயிற்சி முகாம் நெல்லையில் நேற்று தொடங்கியது. பத்திரப்பதிவு அலுவலர்களுக்காக நடைபெற்ற பயிற்சியைத் தொடர்ந்து, இன்று அலுவலகப் பணியாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றுவருகிறது. இதில், 200-க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். நாளை நடைபெறும் பயிற்சி முகாமில் வழக்கறிஞர்கள், பத்திரப்பதிவு எழுத்தாளர்கள், பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இந்தப் பயிற்சி, டாடா நிறுவனத்தின் சார்பாக நடத்தப்படுவதாக நெல்லை மண்டல பத்திரப் பதிவுத்துறைத் தலைவரான வாசுகி தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க