ஜீயருக்கு எதிராக உண்ணும் போராட்டம்... கோவையில் தடபுடல் விருந்துவைத்து அசத்தல்! | Eating protest against srivilliputhur jeeyar

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (09/02/2018)

கடைசி தொடர்பு:16:15 (09/02/2018)

ஜீயருக்கு எதிராக உண்ணும் போராட்டம்... கோவையில் தடபுடல் விருந்துவைத்து அசத்தல்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு எதிராக, கோவையில் தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உண்ணும் போராட்டம்

ஆண்டாள் விவகாரத்தில், கவிஞர் வைரமுத்து, நேரில்வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி, ஶ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், இரண்டாவது கட்டமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்படி, நேற்று தொடங்கியது. இந்தப் போராட்டத்தை ஜீயர் இரண்டாவது நாளாக இன்றும் நீடித்தது. இதனிடையே, பாஜக நிர்வாகிகள் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் இன்று ஜீயரை நேரில் சந்தித்து உண்ணாவிரத்தை முடித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து உண்ணாவிரத்தை ஜீயர் முடித்துக்கொண்டார்.

இந்நிலையில், ஜீயரின் இந்தப் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், கோவையில் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை, காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. பிரியாணி, கறி வகைகள், இனிப்பு, காரம், நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்கள் என்று தடபுடலாக உணவுகள் இதில் பரிமாறப்பட்டு வருகின்றன. காலை தொடங்கிய இந்தப் போராட்டம், மாலை வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

உண்ணும் போராட்டம்

இதில், அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து கு.ராமகிருஷ்ணன் கூறுகையில், கலவரத்தை தூண்டவேண்டும் என்பதற்காகவே, ஜீயர் மீண்டும் உண்ணாரவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் உண்மையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாரா என்பதை, சி.சி.டி.வி கேமரா வைத்துத்தான் கண்காணிக்க வேண்டும். மேலும், சோடா பாட்டில் வீசுவோம் என அவர் கூறியதால், அவரது மடத்தை சோதனையிட வேண்டும் என்றார்.