வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (09/02/2018)

கடைசி தொடர்பு:00:41 (10/02/2018)

இயக்குநர் மணிரத்னத்தின் மல்ட்டி ஸ்டார் படத்தின் பெயர் இதுதான்!

'காற்று வெளியிடை' படத்துக்குப் பிறகு, மணிரத்னம் தனது அடுத்த படத்துக்கான ஸ்க்ரிப்ட் வேலைகளில் பிஸியாகிவிட்டார். இவரது இயக்கத்தில் நடிக்கப்போகும் நடிகர், நடிகை யார் என்ற எதிர்பார்ப்பு சினிமாத்துறையில் அதிகமாகக் காணப்பட்டது. 

மணிரத்னம்

`மகளிர் மட்டும்' படத்தின் புரொமோஷன் வேலைகளிலிருந்த ஜோதிகா, மணிரத்னத்தின் அடுத்த படத்தில் தான் நடிக்கப்போவதாக கூறினார். மேலும், படத்தில் நடிகர்களாக விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு மற்றும் ஃபகத் ஃபாசில் எனக் கூறப்பட்டது. ஆனால், இந்தப் படத்திலிருந்து திடீரென்று நடிகர் ஃபகத் ஃபாசில் விலகிவிட்டார். இந்நிலையில் அவருக்குப் பதில் நடிக்கப்போகும் நடிகர் யாரென்ற கேள்வி எழுந்திருந்தது. மேலும், படத்துக்கான இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் கமிட்டாகியிருந்தார். 

படத்தின் கதாநாயகிகளாக ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் நடிக்கவிருக்கும் நிலையில் இன்று படத்தின் பெயர் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா புரொடக்‌ஷன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு `செக்கச்சிவந்த வானம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், படத்தில் ஃபகத் ஃபாசிலுக்குப் பதிலாக அருண் விஜய் கமிட்டாகியுள்ளார். படத்துக்கான ஒளிப்பதிவுக்காக சந்தோஷ் சிவன் மற்றும் எடிட்டராக ஶ்ரீகர் பிரசாத்தும் ஒப்பந்தமாகியுள்ளனர். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகவிருக்கும் இந்தப் படத்தில், புதிதாகச் சேர்ந்திருக்கும் அருண்விஜய்யிடம் படம் பற்றி கேட்டால், ``எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாகயிருக்கிறது. சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக மணி சார் படம் இருக்கும். விரைவில் படப்பிடிப்பு தொடங்கயிருக்கிறது. தற்போது இதற்கு மேல் படம் பற்றி எதுவும் சொல்ல முடியாது'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க