’’காரணமின்றி நீண்டகால விடுப்பெடுத்தால் பணிநீக்கம்!’’ - ரயில்வேத் துறை அமைச்சர் அதிரடி

உரிய காரணமின்றி நீண்டகால விடுப்பெடுத்தால் பணிநீக்கம் செய்யப்படும் என்று ரயில்வேத் துறை ஊழியர்களுக்கு அமைச்சர் பியூஷ் கோயல் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


இதுதொடர்பாக ரயில்வேத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’அமைச்சர் பியூஷ்கோயல் அறிவுறுத்தலின்படி ரயில்வேத் துறையின் செயல்திறனை அதிகரிக்கவும், ஊழியர்களின் பணித்திறனை அதிகப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இதற்காக ரயில்வேயில் உள்ள பல்வேறு துறைகளில் உரிய காரணமின்றி நீண்டகால விடுப்பில் இருக்கும் ஊழியர்களைக் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இந்தப் பணியின் மூலம் ரயில்வேயில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் மொத்த ஊழியர்களான 13 லட்சம் பேரில், 13 ஆயிரம் பேர் உரிய காரணங்களின்றி நீண்ட விடுப்பில் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் மீது ஒழுங்கீன நடவடிக்கையாக அவர்களை பணிநீக்கம் செய்வதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ரயில்வேத் துறை விதிகளின்படி அவர்களை பணிநீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகால விடுப்பில் உள்ள அந்த ஊழியர்கள் உரிய காரணத்தைத் தெரிவிக்கவில்லை என்றால் அவர்கள், பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!