``மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து குறித்து நீதி விசாரணை வேண்டும்!’’ - திருமாவளவன் வலியுறுத்தல்

மதுரை ஆதினம் அருணகிரிநாதரை தொல்.திருமாவளவன் அவரது மடத்தில் சென்று சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
   

திருமாவளவன்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இன்று மதுரை வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், இரவு 7 மணி அளவில் மீனாட்சியம்மன் கோயில் அருகே அமைந்திருக்கும் மதுரை ஆதின மடத்துக்குச் சென்றார். அவருடன் கட்சியினர் மட்டும் சென்றனர். ஆதினத்துடன் நீண்டநேரம் பேசிவிட்டு வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''மதுரை ஆதினத்துடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. இந்து அறநிலைய ஆட்சித்துறையை சைவ-வைணவ பாதுகாப்புத் துறையாக மாற்ற வேண்டும் என்ற மதுரை ஆதீனம் கூறியுள்ள கருத்தை வரவேற்கிறேன். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து, நீதி விசாரணை நடத்த வேண்டும். தீவிபத்து, மின் கசிவால் ஏற்பட்டதா அல்லது சமூக விரோதிகளின் சதிச் செயலா என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும்'' என்று கூறிவிட்டு கிளம்பினார்.  திருமாவளவன், ஆதினத்துடன் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!