அரசியல்வாதிளைப்போல ஆன்மீகவாதிகள் செயல்படக் கூடாது!- ஜி.ராமகிருஷ்ணன் காட்டம்

''அரசியல்வாதிகளைப்போல ஆன்மிகவாதிகள் செயல்பட கூடாது. ஜீயர் உண்ணாவிரதம் இருந்தது தவறு. தற்போது உண்ணாவிரதத்தை கைவிட்டது வரவேற்கத்தக்கது'' என்று  ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இன்று வந்த  சி.பி.எம். மாநிலச்செயலாளர்  ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார் .

அரசியல்வாதிகளை

தொடர்ந்து அவர்  செய்தியாளர்களிடம், '' தமிழக ஆளுநர் வரம்பு மீறி நடந்து கொள்கிறார். ஆளுநர்கள் விழாக்களில் கலந்து கொள்ளலாம், அதற்கு மாறாக மாநில, மத்திய அரசு திட்டங்களை ஆட்சியர் அலுவலகங்களில் அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்வது  அவருக்கு அளிக்கப்பட்ட அதிகார  வரம்புக்கு மீறிய செயல். மாநில அரசு, மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படுகிறது. மக்களை பாதிக்கும் திட்டங்களைக் கொண்டு வரும் மத்திய அரசை, மாநில அரசு எதிர்ப்பதில்லை. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் இருந்தது தவறு. தற்போது உண்ணாவிரதம் கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது. அரசியல்வாதிகளைப்போல ஆன்மிகவாதிகள் செயல்பட கூடாது.  தி.மு.கவுடன்  தற்போது கூட்டு இயக்கமாக உள்ளோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.  வைரமுத்து விவகாரத்தில் சங்பரிவார் , பி.ஜே.பியினர் மதவாதத்தை தூண்டும் வகையில் பிரச்னையை திசை திருப்புகின்றனர். பேருந்துக் கட்டணம் அதிக அளவில் உயர்த்தப்பட்டு,  பெயர் அளவுக்கே  குறைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!