"ஆட்சி செய்யும் கட்சிகள் தான் ரவுடிகளை வளர்த்து விடுகின்றன" - சீமான் தாக்கு!

" ளுகின்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தான் ரவுடிகளை வளர்த்து விடுகிறார்கள். தேவைப்படாத போது அவர்களே  என்கௌண்டர் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கிறார்கள் " என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

சீமான்

நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் "தமிழ்நாட்டில் கத்தியை வைத்து கேக் வெட்டும் அளவுக்கு கலாசாரம் கெட்டுவிட்டது" என்று பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  கூறியது பற்றிக் கேட்டபோது " உண்மைதான்.  இருபெரும் கட்சிகளின் ஆட்சிகள் தான் அதை வளர்த்துவிடுவது. காவல்துறையின் ஆதரவும், கட்சிகளின் ஆதரவில்லாமல் யாரும் ரவுடியிசம் செய்யமுடியாது. 
சமூகத்தில் ரவுடிகள் தனியாக உருவாவதில்லை.அடுத்தவர்களின் மீது ஆசிட் அடிப்பதற்கு, பிற கட்சிகளின் கொடிமரங்களை வெட்டுவதற்கு, கூட்டத்தில் கலவரம் செய்வதற்கு, கள்ள ஓட்டு போடுவதற்கு என ஆளுகின்ற கட்சிகள்தான் ரவுடிகளை உருவாக்கி விடுகின்றன. ஏதாவது சிக்கல் வரும்போது  அவர்களை என்கௌண்டர் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கிறார்கள் " என்றார் சீமான்.

பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள  புதிய மருத்துவக் கல்லூரிகள் பற்றிய அறிவிப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு " தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள்  ஆளுகின்ற உயரத்தில் இல்லாததல்தான் தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். புதிய திட்டங்கள் செயல்படுத்த மறுப்பது மட்டுமில்லாமல் இருக்கின்ற உரிமைகளையும் பறிக்கத்தான் நினைக்கின்றனர். அதனால்தான் கர்நாடகாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழ்நாட்டுக்கு கொடுக்க மறுக்கின்றனர் " என்றார் சீமான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!