Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மானிய விலை ஸ்கூட்டர்' - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், இன்றுடன் முடிவடைகிறது. 

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, வேலைக்குச்செல்லும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் (ரூ.25,000) வழங்கப்படும் என அ.தி.மு.க அறிவித்தது. தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்து, பிப்ரவரி 24-ம் தேதி முதல் இத்திட்டம் தொடங்கப்படும் எனவும் அறிவித்தது. அதன்படி, முதற்கட்டமாக ஒரு லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, கடந்த மாதம் 22-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன. அரசின் இந்த அறிவிப்புக்குப் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது. இந்தநிலையில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் பிப்ரவரி 5ம் தேதியுடன் முடிவடைந்ததால், பலரும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 5 நாள்கள் நீட்டித்து, பிப்ரவரி 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்றுடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். கடைசி நாளான இன்று விடுமுறை தினம் என்பதால் விண்ணப்பம் பெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement