வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (10/02/2018)

கடைசி தொடர்பு:15:50 (12/02/2018)

'மூஞ்சிய பார்த்தாலே அருவருப்பு': ஓ.பி.எஸ்ஸை விளாசிய நாஞ்சில் சம்பத்!

கோவையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் கொதிகொதித்துப் பேசியுள்ளனர். தினகரன் அணி சார்பில், எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம், கோவை பி.என்.புதூரில் நடைபெற்றது. அ.தி.மு.க அம்மா அணியின் கோவை மாவட்டச் செயலாளர் சின்னதுரை தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், நாஞ்சில் சம்பத் மற்றும் பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத் பேசுகையில், "பி.ஜே.பி காலில் விழுந்து அடிபணியும் ஆட்சியாளர்களாகத்தான், ஓ.பி.எஸ்ஸூம், ஈ.பி.எஸ்ஸூம் இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் ஒருபோதும் பி.ஜே.பி-யிடம் அடிபணிய மாட்டோம். நாட்டை நாசப் பாதைக்கு அழைத்துச்செல்லும் நரேந்திர மோடியை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு அழைத்து வருவோம் என்று கூறினீர்களே. அழைத்து வந்தீர்களா. 32 அமைச்சர்கள் வேலை செய்தும், அவர்களால் ஆர்.கே.நகரில் வெற்றி பெறமுடியவில்லை. ஆனால், கட்சி, தொப்பிச் சின்னம் எதுவுமே கிடைக்காமல் தினகரன் வெற்றிபெற்றுள்ளார். காசில்லாத நேரத்திலும், நீட் தேர்வால், மரணமடைந்த அனிதாவின் குடும்பத்துக்கு நிதி அளித்த தலைவர்தான் தினகரன்.

தேனி அருகே டீக்கடை வைத்திருந்தவரை, முதல்வராக்கியவர் அம்மாதான். ஆள பார்க்கவே அருவருப்பா இருப்பார். எனது மகளின் திருமணத்துக்க அம்மா தேவதை போல வந்திருந்தார். அவரை வரவேற்க நாங்கள் பூங்கொத்துடன் நின்றுகொண்டிருந்தோம். ஆனால், சம்பந்தப்பட்ட எனக்கு முன்னாடியே, அம்மா காலின் ஓ.பி.எஸ் விழுந்தார்.

எங்கேயாவது, இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ஆவார்களா? கலெக்டர், சப் கலெக்டர் ஆவாரா? முதல்வர் ஒருவர் துணைமுதல்வர் ஆவாரா? அப்படி ஆகிறார் என்றால், அவர் சோற்றால் அடித்த பிண்டம். அவருக்கும் மானத்திற்கும் சம்பந்தமே இல்லை. அறுப்பதற்கு ஒரு காலம் வந்தால், விதைப்பதற்கு ஒரு காலம் வரும்... Becareful... ஈனத்தனமாக நடந்துகொள்ளாதீர்கள்.

நாங்கள் தொண்டர்களை நம்பி ஆட்சி நடத்துவோம். நீங்கள் டெண்டர்களை வைத்து ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு, மத்திய அரசின் கைப்பாவையாக இருந்துகொண்டு வெற்றி பெறமுடியவில்லை. வெட்கமாக இல்லையா. ஜெயலலிதா காணாத வெற்றியையும், தினகரன் காண்பார்" என்றார்.