வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (10/02/2018)

கடைசி தொடர்பு:15:17 (10/02/2018)

'15 ஆண்டுகளாக போலீஸிடம் கண்ணாம்பூச்சி ஆட்டம்'- வாகனச் சோதனையில் சிக்கிய மாவோயிஸ்ட்

15 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட்டுகளான தசரதன் மற்றும் செண்பகவல்லி ஆகிய இருவரும் திருவள்ளூர் அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தசரதன்
 

தசரதம் 14 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தவர். அண்ணாசாலை, முருகமலை, தேனி, கொடைக்கானல் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 15 ஆண்டுகளாக இவரை தமிழ்நாடு க்யூ பிரிவு போலீஸ் தேடி வருகிறது. இந்நிலையில் இவர் நேற்று தன் சொந்த ஊருக்குத் தன் மனைவியுடன் ஆட்டோவில் சென்றிருக்கிறார். அப்போது திருவள்ளூர் மாவட்டம் புள்ளரம்பாக்கம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் தசரதன் சென்ற வாகனத்தை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் இருவரும் போலிஸாரிடமிருந்து தப்பியோட முயன்றபோது இருவரையும் கைது செய்தனர். மாவட்ட கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி முன்னிலையில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.