``இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல்'' - விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இலங்கையில் நாடுமுழுவதும் இன்று (10.2.2018) உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. 

இலங்கையில் உள்ள 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள், 278 பிரதேசசபைகள் உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. மொத்தம் 8,536 பதவிகளுக்காக 57 ஆயிரத்து 219 பேர் போட்டியிடுகின்றனர். ஒரு கோடியே 57 லட்­சத்து 60 ஆயி­ரத்து 867பேர் வாக்­க­ளிக்­கத் தகுதி பெற்­றுள்­ள­னர். 13 ஆயிரத்து 420  மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது. ஒரு லட்சத்துக்கு 73 ஆயிரத்து 383 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு பெரிய அளவுக்கு வன்முறையின்றி நடந்தது. 65,758 போலீஸ் அதிகாரிகளுடன் 4,178  சிறப்பு அதிரடிப்படை போலீஸாரும் 5,953 சிவில் பாதுகாப்புப் படையினரும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்தபின்னர் இன்று மாலையே வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். 6,823 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!