``மாடுகளுக்கு சிகிச்சையளிக்க 4 மொபைல் வேன்கள்’’ - முதல் ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் திருப்பூர் | Jallikattu event discussion at tirupur collectorate

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (10/02/2018)

கடைசி தொடர்பு:23:00 (10/02/2018)

``மாடுகளுக்கு சிகிச்சையளிக்க 4 மொபைல் வேன்கள்’’ - முதல் ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் திருப்பூர்

திருப்பூரில் முதல்முறையாக வரும் 18ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று (10.2.2018) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகக் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, போலீஸ் உயரதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராதாகிருஷ்ணன், "முதல் முறையாக திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை மிகவும் பிரமாண்டமாக நடத்துவதற்கானப் பணிகளைத் தற்போது மேற்கொண்டு வருகிறோம். பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரமாண்ட கேலரிகளும், போட்டியில் பங்கேற்கும் காளைகளின் பாதுகாப்புக்காக 4 மொபைல் வேன்களும் தயார் நிலையில் வைக்கப்படும். போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் மாடுபிடி வீரர்களுக்காக 20 மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது’’ என்றார்.