வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (11/02/2018)

கடைசி தொடர்பு:00:34 (11/02/2018)

பெரியார் பல்கலைக்கழகத்தில் நிவேதிதை யாத்திரையா?- மாணவி வளர்மதி ஆவேசம்

சகோதரி நிவேதிதையின் 150-வது ரத யாத்திரை தமிழகத்தில் 30 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்த யாத்திரை சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு, ப்ளெக்ஸ் பேனர்கள் கட்டி சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி மற்றும் திராவிடர் விடுதலைக்கழகம், பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதுபற்றி பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி, ''பகுத்தறிவு தந்தை பகலவன் பெரியார் பெயரில் இயங்கிக்  கொண்டிருக்கும் அரசு பல்கலைக்கழகத்திலிருந்து நிவேதிதையின் 150-வது ரத யாத்திரை தொடங்குவதாக நோட்டீஸ் அச்சடித்து மாணவர்களுக்கு கொடுத்து இந்த ரத யாத்திரையில் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று சர்குலர் அனுப்பி மாணவர்களை கலந்துகொள்ள வைத்திருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் ரத யாத்திரையை பெரியார் பல்கலைக்கழகத்தில் இருந்து தொடங்குகிறார்கள். பெரியார் சிந்தனையாளர்களுக்கும், பெரியார் வழிவந்த திராவிடக் கட்சிகளுக்கும், சமத்துவத்திற்காக போராடக்கூடிய அமைப்புகளுக்கும் சவால் விடும் வகையில் திட்டமிட்டு இதை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது. மீறி கேட்டால் பல்கலைக்கழகத்தில் பணம் இல்லை என்கிறார்கள். ஆனால் இந்த ரத யாத்திரைக்கு பிளெக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு, மேடை அமைத்து, மலர் தூவி வரவேற்பதற்கு மட்டும் இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது. ஆர். எஸ்.எஸ். அமைப்பைப் போல பல்கலைக்கழகத்திற்குள் கிறிஸ்தவ, இஸ்லாமிய  மதத்தவர்கள்  பிரசாரம் செய்ய அனுமதி கொடுப்பார்களா?'' என்றார் ஆவேசமாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க