பொய் வழக்குப் போடுவதை நிறுத்த வேண்டும்!- பா.ஜ.க ஆவேசம்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பெரியநரிக் கோட்டையில் உள்ள கெபி உடைக்கப்பட்டது. இதைக் கண்டித்து கிறிஸ்தவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து இந்து முன்னணியைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்தக் கைதைக் கண்டித்து இந்து முன்னணியினர் காளையார்கோயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரசுப்பரமணியன், மாநிலச் செயலாளர்கள் செந்தில், ஏகநாதன், ராமநாதபும் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, சிவகங்கை மாவட்டத் தலைவர் செந்தில்பாண்டி, மாவட்ட செயலாளர் அக்னிபாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர் 

ஆர்ப்பாட்டம் குறித்து அக்னிபாலா பேசும் போது, "சிவகங்கை மாவட்டம் ,காரைக்குடி சங்கராபுரம் பகுதியில்  நாகத்தம்மன் கோயில், சிவகங்கையில் விநாயகர் கோயில் இடிக்கப்பட்டிருக்கிறது. இந்து கோயில்கள் இடிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. இதுபோன்ற நிகழ்வுகளை எப்படி அனுமதிக்க முடியும். தமிழகத்தில் இந்து கோயில்கள் இடிக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அதே நேரத்தில் கிறிஸ்தவ, முஸ்லிம்களின் ஆலயங்களில் நடக்கும் அசம்பாவிதத்திற்கு பா.ஜ.கவினர் மீது தமிழக காவல்துறை பொய்வழக்கு போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!