"மோடி பக்கோடா!"- கூவிக்கூவி விற்ற காங்கிரஸார்

"நாட்டில் வேலையின்மைப் பற்றி பேசுகிறார்கள். இளைஞர்கள் பக்கோடா விற்பனை செய்தால்கூட நாள் ஒன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கலாம். அந்த வருமானத்தையே வேலைவாய்ப்பாகக் கருத வேண்டும்" என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி  கூறினார்.

மோடியின் இப்பேச்சுக்கு இளைஞர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவியது. பெங்களூரு நகரில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தபோது, இளைஞர்கள் பட்டமளிப்பு ஆடையுடன் பேருந்துகளில் பக்கோடா விற்பனை செய்து மோடியின் பேச்சைக் கண்டித்து தங்களது எதிர்ப்பினை காட்டினர். காங்கிரஸ் கட்சியும் தன் எதிர்பைக் கிளப்பியது. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பக்கோடா, பஜ்ஜி விற்பனை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தூத்துக்குடியிலும் மாநகர காங்கிரஸ் கமிட்டியினர் பக்கோடா விற்பனை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டமளிப்பு ஆடையை அணிந்துகொண்டு அடுப்பு மூட்டி, பக்கோடா பொரித்து தட்டுகளில் வைத்து அவ்வழியே சென்றவர்களிடம் கொடுத்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநகர காங்கிரஸ் தலைவர் முரளிதரன், "நாட்டில் வேலையில்லாமல் உள்ள சுமார் 40 லட்சம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பிற்கு வழியை ஏற்படுத்தி தராமல் இளைஞர்களை பக்கோடா விற்றுப் பிழைக்கலாம் எனக் கூறிய பிரதமர் மோடியை வன்யாமையாகக் கண்டிக்கிறோம். பக்கோடா விற்பது தவறல்ல.. காளான், அலங்கார மீன்களையும் உற்பத்தி செய்து  விற்பனை செய்யலாம் என மோடிக்கு ஆதரவாகப் பேசி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் சர்ச்சையை கிளப்பி உள்ளார். அவரது பேச்சையும் கண்டிக்கிறோம்." என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!