சார்ஜர், தங்க குச்சி மூலம் கடத்தல்...! ஒரே நாளில் ரூ. 78 லட்சம் மதிப்புள்ள தங்கம் சிக்கியது!

 சார்ஜர் மற்றும் தங்க குச்சி மூலம் கடத்தப்பட்ட  சுமார் 78 லட்சம் ருபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம்  திருச்சி விமான நிலையத்தில் சிக்கி உள்ளது.
தங்க.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி  வந்த பயணிகளை சுங்கத்துறை வான்நுண்ணறிவு  பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். 
 
அப்போது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த  முகமது ரபுயூதீன் என்பவர் கொண்டுவந்த பொருட்களை அதிகாரிகள் சோதனை செய்தபோது,   அவர் சார்ஜரில் மறைத்து கொண்டு வந்த  600 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  அதன்  மதிப்பு ரூபாய் 18 லட்சம். மேலும் இதே விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த பைசல்கான் மற்றும் பக்ருதீன் என்பவர்களிடம் சுமார் 952  கிராம் எடையுள்ள  ரூபாய் 29 லட்சம் மதிப்புள்ள தங்கமும்,  மற்றொரு பயணியிடம் ரூபாய் 20 லட்சம் மதிப்பிள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
இதேபோன்று நேற்று நள்ளிரவு சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூட் விமானத்தின் பயணிகளிடம் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிவகங்கையை சேர்ந்த பிரசாந்த் ஆரோக்கியம் என்பவர் மறைத்து எடுத்து வந்த 131 தங்க கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்க கம்பிகள் எடை 363 கிராம் என்றும், இதன்  மதிப்பு ரூபாய் 11 லட்சம் எனக் கருதப்படுகிறது.
 
நேற்று இரவு மட்டும் ரூபாய் 78 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் திருச்சியில் தங்க கடத்தல் அதிகரிக்க துவங்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!