திருச்செந்தூர் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. ஒன்றரை அடி நீளமும், சுமார், 25 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. பொதுவாக ஆமைகள் நீர் மற்றும் நிலத்தில் வாழும் தன்மை கொண்டது. இந்த வகை ஆமைகள் கடலின் ஆழமான பகுதியில் வாழும் தன்மை கொண்டது. இனபெருக்க காலங்களில், முட்டையிடுவதற்காக கரைக்கு வரக் கூடியது. பாதுகாக்கப்பட்ட இந்த உயிரினத்தை பிடிப்பதற்கு அரசு தடை விதித்துஉள்ளது.

இந்த நிலையில் ஒரு  கடல் ஆமை இறந்து, கரைஒதுங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரை ஒதுங்கிய ஆமையை பக்தர்கள் பார்த்துச் சென்றனர். கடலில் ஏதாவது விசைப்படகு அல்லது கப்பல்களில் மோதிஅடிபட்டோ அல்லது ஏதாவது உயிரினம் கடித்ததனாலோ இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!