``அரசு ஊழியர் தற்கொலை’’ - நிலஅளவைத் துறை அதிகாரிகளிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை! | Tirunelveli surveyor department employee Suicide: Police begins investigation

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (11/02/2018)

கடைசி தொடர்பு:19:30 (11/02/2018)

``அரசு ஊழியர் தற்கொலை’’ - நிலஅளவைத் துறை அதிகாரிகளிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை!

நெல்லை மாவட்டத்தில் நில அளவைத் துறையில் பணியாற்றிய ஊழியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, அவருக்கு டார்ச்சர் கொடுத்த அதிகாரிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டார்ச்சர் காரணமாக தற்கொலை

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவைத் துறையில் வரைவாளராகப் பணியாற்றி வந்தவர் முத்துமாலை. மேலதிகாரிகள் அவருக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்ததால் பிப்ரவரி 10-ம் தேதி காலையில், தற்கொலை செய்துகொண்டார். கடந்த சில தினங்களாகவே அதிகாரிகளின் டார்ச்சர் குறித்து குடும்பத்தினரிடம் மனம் நொந்து பேசி வந்த அவர், தற்கொலை செய்து கொண்டதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரையிலும் அவரது உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் மருத்துவமனையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீஸார் சமாதானப் பேச்சுவாரத்தை நடத்திய பின்னரே உடலை வாங்கி இறுதிச் சடங்குகளைச் செய்தார்கள். இந்தநிலையில், உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் நில அளவைத்துறையில் பணியாற்றும் உயரதிகாரிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

முத்துமாலையுடன் பணியாற்றிய சக ஊழியர்களையும் விசாரணைக்கு அழைத்த போலீஸார், அவர்களிடமும் விசாரணையைத் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். பணியின் போது, முத்துமாலைக்கு நெருக்கடி கொடுத்த அதிகாரிகள் யார்?. என்ன நோக்கத்துக்காக அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது? என்பது உள்ளிட்ட விவரங்களை போலீஸார் சேகரித்து வருகிறார்கள். அதனால் நில அளவைத் துறை ஊழியர்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.