மின்வாரிய ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை!

தமிழ்நாடு மின்சாரவாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக நாளை (12.2.2018) முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாகக் கடந்த மாதம் 22-ம் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மின்வாரியத் தொழிற்சங்கங்கள், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் அரசுத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தின. பேச்சுவார்த்தையில், வருகிற பிப்ரவரி 12-ம் தேதிக்குள் மின்வாரியத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தொழிலாளர் ஆணையர் உறுதியளித்தார். இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள் அமைதியாகச் சென்றுவிட்டனர். ஆனால், ஊதிய உயர்வு தொடர்பாக இன்று வரை அதற்கான எந்த முயற்சியும் அரசு தரப்பிலிருந்து எடுக்காததால், வருகிற 16-ம் தேதி மின்வாரியத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தன. அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 22-ம் தேதி தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் தொழிற்சங்கங்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது.

அந்தக் கூட்டத்தில், பிப்ரவரி 12-ம் தேதி ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் முடிவு செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல், மின்சார வாரிய ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து, வரும் 16-ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய 10 சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்கள், அதிகாரிகள் மற்றும் அரசு தரப்பில் நாளை (12.2.2018) பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சமரசத் தீர்வு காணப்படவில்லை என்றால், திட்டமிட்டபடி வரும் 16-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்கப்படும் என்று மின்வாரிய ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!