ஹார்வர்டு பல்கலை சிறப்புரையைத் தமிழில் ட்விட்டிய கமல்!  

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைகழகத்தில், நேற்று அதிகாலை (இந்திய நேரப்படி ) கமல் உரையாற்றினார். வேட்டி சட்டை அணிந்து, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் கமல். வணக்கம் என்று ஆரம்பித்தவருக்கு, பெரும் ஆரவாரத்துடன் வரவேற்பு கிடைத்தது. பெருவாரியான மக்களைச் சென்றடைய, தொடர்ந்து ஆங்கிலத்திலேயே உரையாற்றினார்.   

இந்த முழு உரையையும் ஆரம்பிக்கும் முன் கமல், 'தவறில்லாமல் இருக்க பார்த்துப் படித்துவிடுகிறேன்' என்று கூறி ஆங்கிலத்தில் தன் உரையை வாசித்தார். அந்த ஆங்கில உரையை மொழிபெயர்ப்பு செய்ததில் சில தவறான செய்திகளும் உலவிவந்தன. இந்நிலையில், கமல் ஹாசனே அந்த ஆங்கில சிறப்புரையைத் தமிழாக்கம் செய்த பிரதியை ட்வீட் செய்திருக்கிறார். அவரது ட்வீட் பின் வருமாறு... "வணக்கம்! ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் நான் ஆற்றிய உரையை, எம் மக்களுக்காக அதன் தமிழ் மொழிபெயர்ப்பை இணைத்துள்ளேன். தமிழர்களின் எதிர்காலம்குறித்த என் அக்கறையை உலகெங்கும் அறியச்செய்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு என் நன்றி! நாளை நமதே."

கமல்

ஹார்வர்டு கமல் உரை

ஹார்வர்டு கமல் உரை

 

அதே மேடையில், தனது 'நாளை நமதே' வலைதளத்தையும் கமல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது

     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!