“எப்படி சினிமாவுக்குள் வந்தேன்!”- 'ஒரு அடார் லவ்' பட நாயகி பிரியா பிரகாஷ் #PriyaPrakashVarrier

வாரா வாரம் ஏதோ ஒன்று இன்டெர்நெட் உலகைக் கலக்கிவருவது வழக்கமாகிவிட்டது. ஜிமிக்கி கம்மல் ஆரம்பித்து ஷின்சான் வரை வைரல் லிஸ்ட் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த வாரம் வைரல் லிஸ்டில் கலக்கிவருபவர், பிரியா பிரகாஷ். தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளார், பிரியா.

பிரியா பிரகாஷ்

ஒமர் லுலு இயக்கத்தில் 'ஒரு அடார் லவ்' படத்தின் 'மாணிக்க மலராய பூவி' பாட்டு வெள்ளியன்று வெளியானது. பெரிய நடிகர்கள் நடிக்காத இப்படத்தில், இந்தப் பாடலின் வீடியோவை இதுவரை 38 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஷான் ரஹ்மான் இசையில் இப்பாடலை வினீத் ஶ்ரீனிவாசன் பாடியுள்ளார். 

இந்தப் பாடலை இத்தனை ஃபேமஸ் ஆக்கியது, நடிகை பிரியா பிரகாஷின் சிறுசிறு முக பாவனைகள்தான். இவரது க்யூட் எக்ஸ்பிரஷன்கள் பலரையும் கவர்ந்தது. சமூக வலைதளங்களில் பிரியா பிரகாஷுக்கு பல ஃபேன் பக்கங்கள் வளர தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை ஷேர் செய்துள்ளார். கூடவே, ஒரு வீடியோவையும் பிரியா பிரகாஷ் பகிர்ந்துள்ளார்.

Priya P Varrier | பிரியா பிரகாஷ்

அதில், தனக்கு சிறு வயதிலிருந்து நடிப்பதற்கு ஆசையெனவும், 'சங்ஸ்' என்ற மலையாளப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் 12-ம் வகுப்பில் இருந்த காரணத்தால் தன்னால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லையென்றும், அதன்பிறகே, 'ஒரு அடார் லவ்' படத்தில் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறியிருக்கிறார். இவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகளுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களைக் குவித்துவருகின்றனர். 

 

'ஒரு அடார் லவ்' படம், ஹை ஸ்கூல் காதல் வாழ்க்கையைப் பற்றிய படம் எனப் படக்குழு கூறியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!