`இது நாராயணசாமி அல்வா கடை' - ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சரைக் கலாய்த்த பா.ஜ.க-வினர்

மோடியை விமர்சித்து பக்கோடா விற்பனை செய்த முதலமைச்சர் நாராயணசாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகப் புதுச்சேரி பா.ஜ.க-வினர் அல்வா கடை திறந்து பொது மக்களுக்கு விற்பனை செய்தனர்.

பாஜக

”நம்இளைஞர்கள் பக்கோடா விற்று தினமும் சம்பாதிக்கிறார்கள். அதுவும் நல்ல ஒரு வேலை வாய்ப்புதானே” என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார். பிரதமரின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. அதன்படி அவரின் அந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் பஜ்ஜி, பக்கோடா போட்டு விற்கும் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியின் பிரதான வீதியான நேரு வீதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகக் காங்கிரஸ் பக்கோடா போராட்டம் செய்த அதே நேரு வீதியில் புதுச்சேரி பா.ஜ.க-வினர் `நாராயணசாமி அல்வா கடை” என்று பெயரில் அல்வா கடையைத் திறந்து அல்வா விற்பனையில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலப் பா.ஜ.க தலைவர் சாமிநாதன் தலைமையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் கலந்துகொண்டு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆட்சிக்கு எதிராகக் கோஷமிட்டனர். மேலும், “புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையிலும் மக்கள் நலத்திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்தவில்லை. மின்சாரம், வீட்டுவரி, சொத்துவரி போன்றவை வரலாறு காணாத அளவில் உயர்த்திவிட்டார்கள். மாநில வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தாமல் மக்களுக்கு அல்வாதான் கொடுத்துக்கொண்டிருக்கிறார்” என்று கூறி அல்வா விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் நாராயணசாமி மன்னிப்புக் கேட்கும் வரை எங்கள் போராட்டங்கள் தொடரும்” என்று தெரிவித்தன

Do you like the story?

Please Appreciate the Author by clapping!