முறைகேட்டைத் தடுக்க ஆன்லைன் பத்திரப்பதிவு | Register Patta Chitta Through Online

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (12/02/2018)

கடைசி தொடர்பு:16:45 (12/02/2018)

'முறைகேட்டைத் தடுக்க ஆன்லைன் பத்திரப்பதிவு' - முதல்வர் தொடங்கிவைத்தார்!

பத்திரப் பதிவை எளிமைப்படுத்தும் நோக்குடனும் பதிவுத்துறையில் மாற்றம் கொண்டுவரும் அடுத்த முயற்சியாகவும், தமிழகத்தில் பத்திரப் பதிவை இணையமயமாக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

பத்திரப் பதிவை இணையமயமாக்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு, டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டு, அதற்கான மென்பொருளை உருவாக்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து, தமிழகத்தை மொத்தம் 9 மண்டலங்களாகப் பிரித்து, மண்டலத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் மொத்தம் 9 அலுவலகங்களில் இந்த ஆன்லைன்  பத்திரப் பதிவு, சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. இதில், சில பிரச்னைகள் இருப்பதாகப் பதிவுத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனால், சம்பந்தப்பட்டவர்களுக்குத் தேவையான பயிற்சி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஆன்லைன் பத்திரப் பதிவுக்கான மென்பொருள் மற்றும் சேவையை முதலமைச்சர் பழனிசாமி இன்று (12.2.2018) தொடங்கிவைத்தார். தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் இனி ஆன்லைன் மூலமே பத்திரப்பதிவு நடைபெறும். இதனால், தமிழகத்தில் உள்ள 575 சார்-பதிவாளர் அலுவலங்களிலும் நாளை (13.2.2018) முதல் இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க