வாங்கியது ரூ.2,500 லஞ்சம்; சிறையோ 7 ஆண்டுகள்! - அதிரடித் தீர்ப்பு வழங்கிய நீதிபதி

லஞ்சம் வாங்கிய நில அளவையாளருக்கு, 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது, அரியலூர் நீதிமன்றம். 

                              

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள வல்லம் கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் கருணாநிதி. இவரது மனைவி விஜயாவின் பெயரில் உள்ள நிலத்தை அளந்துகொடுக்க,  கடந்த 2012-ம் ஆண்டு  குவாகம்  பிர்கா நில அளவையாளா் மணிமொழி  அணுகியுள்ளார். அவா், நிலத்தை அளக்க  2 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார். அதற்கு கருணாநிதி, எல்லாம் சட்டப்படிதானே செய்திருக்கிறேன் நான் எதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.அ தற்கு அவர், இங்கு பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று சொல்லியிருக்கிறார். 

                           
 கோபமான கருணாநிதி, லஞ்ச ஒழிப்புப் போலீஸாரை அணுகியிருக்கிறார். அதற்கு, அவர்கள் கொடுத்த 2,500 ரூபாய் பணத்தை  நில அளவையாளா் மணிமொழியிடம் லஞ்சமாகக் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அவரை கையும் களவுமாகப் பிடித்து,  கைதுசெய்தனா். இந்த வழக்கு விசாரணை,  அரியலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி,  நில அளவையாளா் மணிமொழிக்கு  7ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!