சண்டையை விலக்கிவிடச் சென்றவருக்கு நடந்த கொடூரம்!

'நமக்கு எதுக்குடா வம்பு?' எனப் பலரும் விலகிச்செல்லும்போது, இருவருக்கிடையே நடந்த சண்டையை விலக்கிவிடச் சென்றவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த பெருங்குடி வாசுகி நகரில் அழகர் என்பவர் வசித்துவருகிறார். இவரது வீட்டில் அசைவ உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு உறவினர்கள் சாப்பிட்டுச் சென்றுள்ளனர். அழகரின் தம்பி சுரேஷும்  சாப்பிட்டு வெளியே வீட்டில் வெளியே நின்றுகொண்டிருந்தார். நேற்று  சுமார் இரவு 7 மணியளவில் பக்கத்துவீட்டுக்காரர் பாலமுருகன் என்பவரிடம், பெருங்குடியைச் சேர்ந்த ரவுடி முனீஸ் மற்றும் அவரின் நண்பர்கள் சேர்ந்து மதுபோதையில் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.

வாய்த்தகராறு சண்டையாக மாற, சுரேஷ் இவ்விஷயத்தில் தலையிட்டு சண்டையை விலக்கச் சென்றுள்ளார். சுரேஷை, 'உனக்குத் தேவையில்லாத பிரச்னை' என  ரவுடிகள் கூறியுள்ளனர். அதைப் பொருட்படுத்தாமல் 'சண்டை வேண்டாம்' என அறிவுரை கூறியுள்ளார் சுரேஷ். அதைக் கேட்காமல் கோபம் அடைந்த ரவுடிகள் அப்போது சுரேஷ் தலையில் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து பெருங்குடி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இறந்த சுரேஷின் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு  அனுப்பி வைத்தனர். இந்தக் கொலையை செய்த  முனிஸ்மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சம்பவ இடத்துக்கு திருமங்கலம் டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் வருகை தந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!