ஏலத்துக்கு வருகிறது கவிதாலயா நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா புரொடக்சன்ஸ். 

அக்னி சாட்சி, புன்னகை மன்னன், அண்ணாமலை, ரோஜா, முத்து எனப் பல வெற்றிப் படங்களைக் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. இந்தநிலையில், கவிதாலயா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சொத்துகள் தற்போது ஏலத்திற்கு வந்திருக்கின்றன. வங்கியில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 

இதற்கான அறிவிப்பு ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் நேற்று (11.2.2018) வெளியாகியிருக்கிறது. UCO வங்கியில் வாங்கிய ஒரு கோடியே 36 லட்சம் கடன் பணம் செலுத்த முடியாமல் போனதால், சென்னை அபிராமபுரத்தில் உள்ள கவிதாலயா புரொடக்சன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடங்கள் மற்றும்  வீடு உள்ளிட்டவை ஏலத்துக்கு வர இருக்கின்றன. பல்வேறு வெற்றிப்படங்களை தயாரித்த கவிதாலயா புரொடக்சன்ஸின் சொத்துகள் ஏலத்திற்கு வந்துள்ளது தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!