``மீனாட்சியம்மன் கோயில் விபத்தைப் பார்வையிட்ட தமிழிசை'' - கொந்தளித்த பக்தர்கள்!

தமிழிசை

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கடந்த 2-ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். இந்த நிலையில், மாவட்ட உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் அன்று இரவு முழுவதும் அங்கு ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் பொதுமக்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின்மீது கோபத்தை வெளிப்படுத்தினர். போதிய கருவிகள் இல்லாததாலும் இருப்பில் இருந்த கருவிகள் பழுதடைந்த நிலையில் இருந்ததாலும் தீயை அணைக்க மிகத் தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் பல வழக்குகளும் போடப்பட்டுவரும் நிலையில் அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் சினிமா பிரபலங்களும் இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் கோயிலைப் பார்வையிட்டு வருகின்றனர். அமைச்சர் செல்லூர் ராஜு பார்வையிட்ட பின் பெரிய அளவில் பாதிப்பில்லை என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டு 10-வது நாளான இன்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மீனாட்சியம்மன் கோயிலை இன்று மாலை பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த பக்தர்கள், விபத்து நடந்து 10 நாள் ஆனாபின்தான் பி.ஜே.பி. மாநிலத் தலைவர் கோயிலுக்கு வருவாரா என்று கொந்தளிந்தனர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!