Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``குடும்பத் தகராறில் மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவன்’’ - நிராதரவான 3 குழந்தைகள்!

நெல்லையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொன்றுவிட்டுக் கணவனும் தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவர்களின் மூன்று குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட சோகம் நடந்துள்ளது.

கொலை- தற்கொலை

நெல்லையை அடுத்த பாளையங்கோட்டை சம்பக்கடைத் தெருவில் வசித்து வந்தவர் மோகன். இவரது மனைவி அந்தோணியம்மாள். இவர்களுக்கு 11 வயதில் கோபி என்ற மகனும், 10 வயதில் நந்தினி என்ற மகளும், 8 வயதில் சங்கர் என்ற மகனும் உள்ளனர். மூவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள். மோகன் மீன் விற்பனை செய்து வருகிறார். இதற்காக அவர் அடிக்கடி பிறரிடம் கடன் வாங்குவது வழக்கம்.

வியாபாரத்துக்காகக் கடன் வாங்குவதால், குடும்பத் தேவைக்குப் பணம் கொடுக்க முடியாமல் மோகன் திண்டாடியதாகவும், அதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் கணவன், மனைவி இருவரும் அடிக்கடி பிரிந்து வாழ்வதும், பின்னர் ஒன்றாக வாழ்வதுமாக இருந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, அந்தோணியம்மாள் அருகில் உள்ள மனக்காவம்பெருமாள் நகர் பகுதியில் வசிக்கும் அவரது சகோதரியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். 

இதனால் கோபம் அடைந்த மோகன் மனைவியை, வீட்டிற்குத் திரும்புமாறு அழைத்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், அந்தோணியம்மாளைச் சரமாரியாகக் கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தோணியம்மாள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்து தப்பிச் சென்ற மோகன், தன் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று அவர்களை அழைத்துள்ளார்.

பள்ளிக்கு செல்லும் வழியில் மோகன் விஷம் குடித்துள்ளார். அதனால் பள்ளியின் முன்பாகவே அவர் மயங்கிச் சரிந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்டதால், அவர்களின் மூன்று குழந்தைகளும் நிராதரவான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாகக் குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement