Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’’ரூ.5,000 கொடுத்தால்தான் வீட்டு வரி ரசீது கிடைக்கிறது!’’ - சேலம் கலெக்டரிடம் முறையிட்ட மக்கள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொகுதிக்கு அருகே உள்ள சங்ககிரி புள்ளாக்கவுண்டப்பட்டி அருகே உள்ள அம்மா நகர் பகுதியில் அடிப்படை வசதி இல்லை என்று சேலம் கலெக்டர் அலுவலகத்திற்குப் பள்ளிக் குழந்தை, முதியவர்களோடு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். மேலும், ``கலெக்டர் அம்மாவை அனைவரும் பார்க்க வேண்டும்’’ என்று கூறி போலீஸாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியில் வசித்துவரும் மோகன் என்பவரிடம் பேசினோம். '' நாங்க சங்ககிரி வட்டம், புள்ளாக்கவுண்டப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள புளியம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தோம். அந்தக் கிராமத்தில் நிலம் இல்லாத ஏழைகளுக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரசு அதிகாரிகள் அநாதை நிலத்தை 48 பேருக்குப் பிரித்துக் கொடுத்தார்கள். அந்த இடத்திற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டி  நான்கு ஆண்டுகளாகக் குடியிருந்து வருகிறோம்.

எங்களுக்குக் குடிநீர், கழிப்பிட வசதி, மின்சாரம் என எந்த வசதியும் இல்லை. எங்க சக்திக்கு தகுந்தாற்போல குடிசைகள், ஓட்டு வீடுகள் போட்டுவிட்டோம். எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு சேலம் கலெக்டர் அம்மாவைச் சந்தித்துப் புகார் கொடுத்தோம். உடனே டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., தாசில்தார் மூலம் உத்தரவு பறந்தது. உடனே அவர்களும் எங்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முன்வந்தார்கள்.

ஆனால், எங்க ஊர் வி.ஏ.ஓ., அழகேசன், அடிப்படை வசதி செய்துகொடுக்க முடியாது என்கிறார். வீட்டுக்கு ரூ.5,000 கொடுத்தால்தான் வீட்டு வரி ரசீது தருகிறார். எங்க ஊரில் இரண்டு பேர் ரூ.5000 கொடுத்து ரசீது வாங்கிக்கொண்டார்கள். நாங்கள் ரூ.5000 கொடுக்க முடியாது. எங்களால் அந்த அளவுக்குப் பணம் கொடுக்க முடியாததால், அவரிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். ரூ.5,000 கொடுத்தால் மட்டுமே வீட்டு வரி ரசீது கொடுக்க முடியும் என்று கூறி ஆயிரம் ரூபாயை அவர் திரும்பக் கொடுத்து விட்டார். இதுகுறித்து கலெக்டரை சந்தித்துப் புகார் கொடுத்தோம். கலெக்டர் அம்மா ஆர்.டி.ஓ.,வைக் கூப்பிட்டு  ஒரு வாரத்திற்குள் இவர்களுடைய புகாரை சரி செய்யவில்லை என்றால் வி.ஏ.ஓ., மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி இருக்கிறார்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement